Saturday, 3 January 2015

THANKS TO PMG, CCR FOR TAKING EFFORTS TO 'WRITE OFF' MINUS BALANCE CASES IN CHENNAI CITY REGION

 
 
 
அன்புத் தோழர்களுக்கு  இனிய  வணக்கம் .  

மத்திய சென்னை  ,  தென் சென்னை  , தாம்பரம் உள்ளிட்ட சென்னை பெருநகர  மண்டலம்  சார்ந்த   கோட்டங்களில் MINUS  BALANCE  பிரச்சினையில்  பல தோழர்கள்/தோழியர்கள் பாதிக்கப்பட்டு  பல ஆயிரக்கணக்கான ரூபாய்   ஊதியப் பிடித்தம் செய்திட உத்திரவிட்டதை எதிர்த்து  நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில்  பிரச்சினையை  பலமுறை PMG, CCR  மற்றும் CPMG  அவர்களிடம் கொண்டு சென்றது குறித்து இந்த வலைத்தளத்தில் ஏற்கனவே நாம்  பிரசுரித்திருந்தோம்.  

கடந்த 28.2.2014 இல் இது குறித்து,  சட்ட விதிகளைச் சுட்டிக் காட்டி   ஒரு நீண்ட கடிதத்தை  அளித்து  PMG, CCR  அவர்களிடம் பேசிய விபரமும் ,  அதற்கு இறுதியாக  அவர்,  சட்ட விதிகளுக்கு மாறான,  பிரச்சினைக்கு உள்ளான  MINUS  BALANCE  CASE  களை  பரிசீலித்து 'WRITE  OFF' செய்திட பரிந்துரைப்பதாக உறுதி அளித்ததையும்  தெரிவித்திருந்தோம்.

அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு  தற்போது  CCR  மண்டலத்தில் மொத்தம் ரூ. 43,54,035.00  க்கு 'WRITE  OFF' செய்திட உத்திரவு பெறப்பட்டு  அது செயலாக்கப்பட்டும்  வருகிறது. குறிப்பாக  சென்னை மத்திய  கோட்டத்தில்  தி. நகர், மயிலாப்பூர்  உள்ளிட்ட பல அலுவலகங்களிலும், தென் சென்னை கோட்டத்தில் ST . THOMAS  MOUNT , MADIPPAAKKAM , NANGANALLUR  உள்ளிட்ட  பல அலுவலகங்களிலும்  தாம்பரம்     அம்பத்தூர் HO உள்ளிட்ட  பல அலுவலகங்களிலும்  இந்த  உத்திரவு அமலாகிறது. 

இது குறித்து  நமது மாநிலச் செயலரிடம் ஏற்கனவே  நமது PMG , CCR  அவர்கள் தெரிவித்தபடி, நம் கோரிக்கைக்கு   வந்த பதிலை    கீழே உங்கள்  பார்வைக்கு அளிக்கிறோம். 

இப்படி பெரிய அளவில் 'WRITE  OFF' பெறுவது இதுவே முதன் முறையாகும்.நம் கோரிக்கையை ஏற்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ரூ.43.5 லட்சம் 'WRITE OFF' பெற்றுத் தந்த  நமது  சென்னை பெருநகர மண்டல PMG திரு. மெர்வின்  அலெக்சாண்டர்  அவர்களுக்கு  நம்  ஊழியர்கள் சார்பாக  மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றியினை  தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியில் நம்மிடம் உறுதி அளித்தபடி  நீண்ட நாள் பிரச்சினையான  திருவண்ணாமலை , ஆரணி   தலைமை அஞ்சலகப் பகுதிகளுக்கு புதிதாக 15 பிரிண்டர்கள் வாங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்தும்  நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.