அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் ! நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் கடந்த 30.12.2014 அன்று CPMG (I/C) திரு. BARMMA அவர்களைச் சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்து கடிதம் அளித்து பேசிய விபரம் அன்றைய தேதியில் நம் மாநிலச் சங்க வலைத்தளத்தில் தெரிவித்திருந்தோம். இதில் முக்கிய பிரச்சினையான PONGAL பண்டிகை காலத்தில் மதுரை PTC யில் உத்திரவிடப் பட்டிருந்த TRAINING SESSION மாற்றியமைக்கப் படவேண்டும் என்பதே . அதற்கு அவரும் உடன் ஆவன செய்வதாக உறுதி அளித்திருந்த விபரம் தெரிவித்திருந்தோம்.
அதன்படி எதிர்வரும் 05.01.2015 முதல் 17.01.2015 வரை அறிவிக்கப் பட்டிருந்த பயிற்சி வகுப்புகள் மாற்றியமைக்கப்பட்டு , இடையில் வரும் 10.01.2015 மற்றும் 11.01.2015 நாட்கள் பயிற்சி வகுப்பு நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் பொங்கலுக்கு முதல் நாளே , அதாவது 14.01.2015 அன்றே முடிக்கப்பட்டு விடும்.
பயிற்சி வகுப்புக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பணிக்கப் பட்டிருந்த 130 ஊழியர்கள் இதனால் பயன் பெறுவார்கள். அவர்கள் அனைவருக்கு நம் மாநிலச் சங்கத்தின் பொங்கல் நல் வாழ்த்துக்கள் !
நம் கோரிக்கையை ஏற்று இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட CPMG (I/C) திரு. BARMMA அவர்களுக்கும் , DPS HQ திரு. கோவிந்தராஜன் அவர்களுக்கும் , அதற்கு உறுதுணையாக இருந்த AD (STAFF ) திரு. ஆறுமுகம் அவர்களுக்கும் ஊழியர்கள் சார்பாக நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது குறித்த DIRECTOR PTC அவர்களின் பதிலை கீழே பார்க்கவும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.