Saturday, 5 May 2012

THANKS TO PMG , CCR - PONDY RT PROBLEMS SETTLED

பாண்டிச்சேரி கோட்டத்தில் கடந்த சுழல் மாறுதல் உத்திரவில் 22  பேர்  பாதிக்கப்  பட்டதாகவும் ,  சட்ட  விதிகளுக்கு  மாறாக  சுழல்  மாறுதல்  உத்திரவுகள்  இடப்பட்டுள்ளதாகவும்  PMG CCR  அவர்களிடம்  மாநிலச்  சங்கம்  புகார் செய்திருந்தது ஏற்கனவே நமது  வலைத் தளத்தில் பிரசுரித்திருந்தோம் .
 
 
தொடர்ந்து PMG, CCR  அவர்களிடம் பேசியதன்  பலனாகவும் , APMG(STAFF)  அவர்களிடம்  பேசியதன் பலனாகவும்   தவறாகப் போடப்பட்ட உத்திரவுகள் ரத்து செய்யப்பட்டன .  மொத்தம் 22  பேருக்கு  இடப்பட்ட உத்திரவுகளில் 19  பேருக்கு  உத்திரவு  மாற்றப் பட்டது. மேலும் ஒருவருக்கு  வேண்டிய இடம் வழங்கப் பட்டது. 
 
 
சுழல் மாறுதல் உத்திரவுகளில்  இத்தனை  அதிகமான  பிரச்சினை தீர்க்கப் பட்டது இதுவே முதல் முறை  எனலாம் .  பிரச்சினைகளை  பரிவுடன்  அணுகிய PMG, CCR  அவர்களுக்கும் , அதற்கு உறுதுணையாக  இருந்த APMG(STAFF)  அவர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த  நன்றி .  உத்திரவுகளை  மாற்றச் சொல்லி  அறிவுறுத்திய படி , எந்தவித  PRESTIGE உம்  பார்க்காமல்  உடனே  மாற்றிக் கொடுத்த  PONDICHERY  முதுநிலைக்  கண்காணிப்பாளர்  அவர்களுக்கும்   நமது  நன்றி !. 
 
 
இட மாற்றம் பெற்ற  தோழர்களுக்கும்  தோழியர்களுக்கும்  நம்  மாநிலச்  சங்கத்தின்  வாழ்த்துக்கள்  !.
 
பிரச்சினை தீர்ந்திட  தொடர்ந்து  மாநிலச் சங்கத்தை அணுகிய  கோட்டச்  செயலர்  தோழர் . கலியமூர்த்தி  அவர்களுக்கும் , கோட்டத்  தலைவர்
தோழர்.  சத்தியமூர்த்தி அவர்களுக்கும் , முன்னணித் தோழர் . வாசு  அவர்களுக்கும்  மாநிலச் சங்கத்தின்  மனம் திறந்த வாழ்த்துக்கள் !.
 
Thanks
NFPE GPO

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.