இந்திய நாட்டின் அனைத்து தொழிற் சங்கங்களின் சார்பில் எதிர்வரும் 28.02.2012 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த அறை கூவலை ஏற்று நமது அஞ்சல் துறையிலும் NFPE, FNPO மற்றும் GDS ஊழியர் சங்கங்களின் JCA சார்பாக இந்த வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டு வேலை நிறுத்த நோட்டீஸ் உம் வழங்கப் பட்டுள்ளது.
மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்த்து நாடு தழுவிய அளவில் அனைத்து பகுதி தொழிலாளர்களையும் ஒன்று திரட்டிப் போராடுவதே இந்த வேலை நிறுத்தத்தின் நோக்கமாகும்.
இதன் முதற் கட்டமாக தமிழக JCA சார்பில் எதிர் வரும் 16.02.2012 அன்று மாலை சுமார் 06.00 மணி அளவில் சென்னை அண்ணா சாலை தலைமை
அஞ்சலகத்தில் ஒரு மாபெரும் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் நடைபெற உள்ளது.
சிறப்புரை : தோழர். K.V. ஸ்ரீதரன் , பொதுச் செயலர் , அஞ்சல் மூன்று, NFPE
தோழர். D. தியாகராஜன், மா பொதுச் செயலர், FNPO
அனைவரும் வருக ! அலை கடல் என திரள்க !
போராட்ட வாழ்த்துக்களுடன்
J.R. மாநிலச் செயலர்.
( (குறிப்பு : JCA சார்பில் வெளியிடப்படும் NOTICE இன் நகல் அனைத்து கோட்ட/ கிளைச் செயலருக்கும் அனுப்பி வைக்கப் படும் . )
Thanks
NFPE GPO
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.