GOODWILL ACTION BY OUR CPMG, TN ON OUR REQUEST ON STAFF MATTERS REGARDING MODIFICATION IN PTC TRAININGS
அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த 08.08.2014 அன்று நமது CPMG உடனான நேர்காணலில் PTC மதுரையில் MACP I மற்றும் MACP II பயிற்சிக்கான தோழர்/ தோழியர்களுக்கு எதிர்வரும் 29.08.2014 விநாயகர் சதுர்த்தி நாளன்று ஊருக்கு வந்து திரும்பவும் 30.08.2014 திரும்பிட சிரமம் ஏற்படும் என்பதை சுட்டிக் காட்டி TRAINING SCHEDULE இல் மாறுதல் வேண்டினோம் என்பதை ஏற்கனவே நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்தோம்.
அதன் பின் நேற்று (13.08.2014) இது குறித்து கடிதம் அளித்திடக் கோரினார்கள். மாநிலம் முழுதும் உள்ள பல்வேறு கோட்டங்களில் நம் தோழர்களிடம் இருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் நாம் 30.08.2014 க்கு பதிலாக 24.08.2014 அன்று வகுப்பு மாற்றித் தந்தால் 28.08.2014 உடன் பயிற்சி முடியும் என்று வேண்டினோம். இதன் மீது இன்று நடவடிக்கை எடுத்து மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனருக்கு நம் CPMG அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
MACP I MACP II TRAINING மட்டுமல்லாமல் PTC மதுரையில் உள்ள அனைத்து TRAINING வகுப்புகளும் எதிர்வரும் 30.08.2014 அன்று ரத்து செய்து அன்றைய தினம் விடுமுறை அளிக்குமாறும் , அதற்கு பதிலாக அனைத்து TRAINING களும் 24.08.2014 க்கு மாற்றிட வேண்டியும் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
ஊழியர்கள் பிரச்சினையில் பரிவுடன் உடன் நடவடிக்கை எடுத்த நமது CPMG திரு. T. மூர்த்தி அவர்களுக்கும் , DPS HQ திரு. A . கோவிந்தராஜன் அவர்களுக்கும் , இதற்கு உறுதுணையாக உடன் செயல்பட்ட AD STAFF திரு .ஆறுமுகம் அவர்களுக்கும் ஊழியர்கள் சார்பாக நம் மாநிலச் சங்கத்தின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!
கீழே பார்க்க CPMG அவர்களின் கடித நகலை :-
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.