THANKS TO PMG, CCR FOR HIS SWIFT ACTION IN HELPING AN OFFICIAL IN DISTRESS !
தென்
சென்னை கோட்டத்தின் நங்கநல்லூர் அஞ்சலகத் தலைவர் தோழர். துரைசாமி
அவர்களின் மகன் கடந்த 26.06.2014 அன்று பல்லாவரத்தில் சாலை விபத்தில் படு
காயம் ஏற்பட்டு உடன் அங்கிருந்தவர்களால் 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம்
அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை
பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்..
அவருக்கு CGHS
APPROVED இல்லாத தனியார் மருத்துவ மனையில் சேர்த்ததாக காரணம்
கூறி MEDICAL ADVANCE நிறுத்தப் பட்டிருந்ததை தென் சென்னை கோட்டச் செயலர்
தோழர். ராஜேந்திரன் அவர்கள் மாநிலச் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு
வந்தார். உடன் மாநிலச் செயலர் இந்தப் பிரச்சினையை சென்னை பெருநகர மண்டல PMG
திரு மெர்வின் அலெக்சாண்டர் அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு சென்று
உதவிட வேண்டினார்.
பிரச்சினை கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட 2.00 மணி
நேரத்தில் PMG CCR அவர்கள் உடன் மேல் நடவடிக்கை எடுத்து EMAIL மூலம்
உத்திரவு அளித்து பாதிக்கப் பட்ட ஊழியருக்கு ரூ. 2,50,000/- மருத்துவ முன்பணம் வழங்கிட ஆவன செய்தார். பாதிக்கப் பட்ட ஊழியரின் இன்னல்களை உணர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த PMG CCR திரு.
மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த
நன்றி. உடன் இந்த பிரச்சினையில் ஈடுபட்டு மருத்துவ முன் பணம் கிடைத்திட ஆவன
செய்த DPS CCR திரு. J .T. வெங்கடேஸ்வரலு அவர்களுக்கும் , ASST DIRECTOR
STAFF திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின்
நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
PMG
CCR அவர்கள் ஊழியர்களின் துன்ப காலங்களில் உடன் ஈடுபட்டு இப்படி உதவி
செய்வது இது முதன் முறை அல்ல. இது போல ஏற்கனவே HEART ATTACK இல்
பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவ முன்பணம் தாமதப்
படுத்தப்பட்ட வடசென்னை கோட்டத்தின் அஞ்சல் நான்கின் DY CIRCLE SECRETARY
தோழர். பத்மநாபன் அவர்களின் பிரச்சினையிலும் நமது PMG
CCR அவர்கள், அவரது நேரடி கவனத்திற்கு கொண்டு சென்ற உடனே ஆவன நடவடிக்கை
எடுத்து சில மணி நேரங்களிலேயே மருத்துவ முன் பணம் வழங்கிட ஆவன செய்தார்
என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். இதனால் உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை
அளிக்கப் பட்டு அவர் இன்று நலமுடன் பணியாற்றுகிறார் என்பது மகிழ்ச்சியான
செய்தியாகும்.
ஊழியர்
நலனில் அக்கறை கொண்ட மனிதாபிமானம் மிக்க இது போன்ற அதிகாரிகள் இருந்தால்
நிச்சயம் இலாக்காவில், ஊழியர்-அதிகாரிகள் நல்லிணக்கம் ஏற்பட்டு இலாக்கா
சேவையில் ஊழியர்களுக்கு அதிக ஈடுபாடு ஏற்படும். சேவையும் மேம்படும். தொழில்
அமைதியும் மேம்படும் என்பது உண்மையாகும். திரு. மெர்வின் அவர்களுக்கு
மீண்டும் நம் நன்றி. தோழர். துரைசாமி அவர்களின் மகன் விரைவில் குணமடைய
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் வாழ்த்துகிறது.!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.