அன்புத் தோழர்களே!
தோழியர்களே! வணக்கம். நமது மாநிலச் சங்கம் இலாக்காவால் ஒப்புதல்
பெறப்படுவதற்கு முன்னர் சென்னை பெருநகர மண்டலத்தில் எங்கு நோக்கினும்
கொத்தடிமைக் கூடம் போல ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் கூட
விரைவுத் தபால் பட்டுவாடா , MPCM மூலம் அலுவலகப் பணிகள் நடத்துதல்,
இரவு நீண்ட நேரத்திற் கும் speed booking கவுண்டர்கள் என்று ஊழியர்கள்
கொடுமைப் படுத்தப்பட்டு வந்தார்கள். இதே போல எங்கு நோக்கினும் அஞ்சலக மூடல் வாடிக்கையாக இருந்ததை நீங்கள் மறந்திருக்க முடியாது .
நாம் முதலில் இந்தப் பிரச்சினைகளை
கையில் எடுத்து RJCM கூட்டத்தில் விவாதித்தோம். அது போலவே அஞ்சலக மூடல்
பிரச்சினைகளில் போராட்டங்கள் நடத்தியும் , அஞ்சலகங்களை பார்வையிட வந்த
பாராளுமண்ட நிலைக்குழுவிடம் பிரச்சினைகளை எடுத்துச் சென்றதன் விளைவாகவும்
இன்று தமிழகத்தில் , குறிப்பாக சென்னை பெரு நகர மண்டலத்தில் ஒரு அஞ்சலகம் கூட மூடப் படவில்லை .
மாற்றாக பல மூடப்பட்ட அஞ்சலகங்களை நாம் திறக்க வைத்திருக் கிறோம் என்பதும் ,
இன்று SPEED POST பட்டுவாடா ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அறவே ஒழிக்கப்பட்டது என்பதும்
பெரும்பான்மையான இடங்களில் ஞாயிறு/ விடு முறை தினங்களில் நடைபெற்றுவந்த MPCM booking நிறுத்தப்பட்டது என்பதும்
அனைத்து அலுவலகங்களிலும் extended hour speed booking நிறுத்தப் பட்டது என்பதும் (NPO தவிர)
நம் மாநிலச் சங்கத்தின் அயராத முயற்சிக்கு கிடைத்த வெற்றிகளாகும் .
இது குறித்த RJCM கூட்டத்தி ன் minutes நகலை ஏற்கனவே இந்த வலைத் தளத்தில் நாம் பிரசுரித்திருந்தோம் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று எண்ணுகிறோம்.
தற்போது இது குறித்து CPMG அலுவலக கடிதம் நமக்கு அளிக்கப்பட்டதை உங்களுக்கு கீழே தருகிறோம்.
இன்னும் ஒரு சில இடங்களில் நீக்கப்
படாத SUNDAY MPCM duty யும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு ரத்து
செய்யப்படும் என்று உறுதி கூறுகிறோம்.
கோட்ட/ கிளைச் செயலர்களால் மாநிலச் சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வரப்படாத அலுவலகங்கள் இருப்பின் தெரியப் படுத்த வேண்டுகிறோம்.
Source : http://aipeup3tn.blogspot.in/
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.