அதிர்ச்சி யூட்டும் அத்து மீறல்கள் ! PERFORMANCE RELATED INCENTIVE என்பது ஆறாவது ஊதியக் குழுவில் கூறப்பட்டது ! ஆனால் PERFORMANCE RELATED PAY என இன்று குட்டி அதிகாரிகளால் அறிவிக்கப் பட்டுள்ளது!
எச்சரிக்கை ! எச்சரிக்கை
! தனியார் மயத்தை விட மோசமான நடவடிக்கைகள் ! தோழர்களே நமது
சுதந்திரத்திற்கும் இனி ஆபத்தா ? வெள்ளைக் காரன் காலத்தை விடவும்
கொடுமையாகுமா ? எச்சரிக்கை !
INDIVIDUAL PERFORMANCE அதாவது
INDIVIDUAL OFFICIALS PRODUCTIVITY என்பது CHENNAI SORTING
பகுதியில் புதிய அளவீடுகளின் அடிப்படையில் கொடுக்கப் படவில்லை என்பதாக
காரணம் காட்டி மொத்த பணித் தேவைக்கும் ஊழியர் பணி அளவிற்கும் ஒரு
மாதத்தில் - இரண்டு நாட்கள் வித்தியாசம் இருக்கிறது என்பதால் , இரண்டு
நாட்கள் குறைவாகப் பணி செய்தததாக கணக்கிட்டு , அதற்கு ஈடான இரண்டு
நாட்கள் சம்பளத்தை கிட்டத்தட்ட 70 ஊழியர்களுக்கு நிறுத்தியதுடன் அல்லாமல் ,
அதனை 'DIES NON ' ஆக கருதி உத்திரவிட்ட CHENNAI SORTING
நிர்வாகத்தின், அதற்கு துணைபோன அதன் இயக்குனரின் சட்டத்திற்கு புறம்பான ,
கோமாளித் தனமான நடவடிக்கைகளை கண்டித்தும் , CHENNAI SORTING இன்
கண்காணிப் பாளரை உடன் மாற்றிடக் கோரியும் இன்று (26.03.2013) திடீரென்று
RMS பகுதியின் JCA தலைவர்கள் CHENNAI SORTING அலுவலக வாயிலில்
காலவரையற்ற உண்ணாவிரதத்தினை மேற்கொண்டனர்.
இதில் FNPO வின் மா பொதுச் செயலர் தோழர்.
தியாகராஜன் உள்பட , NFPE மற்றும் FNPO RMS பகுதியின் மாநிலச் செயலர்கள்
தோழர். சங்கரன், தோழர். குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.
DIES NON எதற்கு அளிக்க வேண்டும் என்ற
சட்ட விதிகளைக் கூட தெரிந்து கொள்ளாமல் சகட்டு மேனிக்கு உத்திரவிடும்
நிர்வாகத்தை கண்டித்தும் , புதிய அளவீடு என்ற பெயரில் தாமாகவே UNSCIENTIFIC
NORM ஏற்படுத்திக் கொண்டு இலாக்கா விதிகளுக்கு எதிராக காட்டு தர்பார்
நடத்தும் நிர்வாகத்தைக் கண்டித்தும் நாளை முதல் காலவரையற்ற வேலை
நிறுத்தத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப் பட்டது
இந்த முடிவுகளை தமிழக JCA மூலம் மாநில
நிர்வாகத்திற்கு தெரிவித்து மேல் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்திட முடிவு
எடுக்கப் பட்டது.
அதன்படி உடனடியாக தலைமையிடத்தில்
இருந்த JCA வின் NFPE தமிழ் மாநில இணைப்புக் குழுவின் கன்வீனர் தோழர்.
J.R., மற்றும் NFPE R3 அகில இந்திய சங்க உதவி பொதுச் செயலர் தோழர். M .B
. சுகுமார், FNPO
P4 சங்கத்தின் மாநிலச் செயலர்
தோழர். குணசேகரன் , FNPO R4 சங்கத்தின் அகில இந்திய உதவிப் பொதுச் செயலர்
தோழர்.ராஜேந்திரன் , FNPO சிவில் விங் மாநிலச் செயலர் தோழர். அந்தோணி
ஆகியோர் CPMG அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர் . தொடர்ந்து
PMG , MM திரு. மெர்வின் அலெக்சாண்டர் அவர்களைச் சந்தித்து பேச்சு
வார்த்தைகளை தொடர்ந்தனர் .
இதன் விளைவாக
CPMG மற்றும் PMG , MM ஆகியோர் நாளை (27.03.2013) காலை 10.00 மணிக்குள்
இந்த 'DIES NON ' உத்திரவை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்தனர். மேலும் IRREGULAR NORMS உள்ளிட்ட இதர பிரச்சினைகள்
குறித்து நாளை காலை பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுப்பதாக உறுதி
அளிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் வேலைநிறுத்தப் போராட்டம் எதுவும்
மேற்கொள்ள வேண்டாம் எனவும் , உண்ணா விரதத்தை உடன் கைவிட வேண்டும் எனவும்
CPMG மற்றும் PMG தரப்பில் கோரப்பட்டது .
இதனை RMS JCA தலைவர்கள்
ஏற்கவில்லை. DIES NON உத்திரவு விலக்கிக் கொள்ளப்பட்டு சம்பளப்
பிடித்தம் ரத்து செய்யப் பட்ட பிறகே போராட்டம் விலக்கிக் கொள்ளப் படும்
எனவும் , அதன் பிறகு இதர பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தை
மேற்கொள்ளப் படும் எனவும் அறிவிக்கப் பட்டது. இந்த முடிவின் அடிப்படையில்
நாளை இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது .
இந்த பிரச்சினை குறித்து நமது
மாபொதுச் செயலர் தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் புது டெல்லியில் இன்று
MEMBER ( O ) அவர்களைச் சந்தித்து பேசியதாகவும் , MEMBER (O ) அவர்கள்
மூலம் CPMG அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும் , டெல்லியில் இருந்து
நமது முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS அவர்கள் இரவு தெரிவித்தார்.
போராட்ட நிகழ்வில் , தோழர்.
கண்ணையன், முன்னாள் NFPE கன்வீனர், தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்
மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநிலச் செயலர் தோழர். JR ,
நம் அகில இந்திய சங்கத்தின் செயல் தலைவர் தோழர். NG , NFPE சம்மேளனத்தின்
உதவி மாபொதுச் செயலர் தோழர் . ரகுபதி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நம்
பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.
நாளைக் காலையில் பேச்சு
வார்த்தையும் மீண்டும் தொடர்கிறது. குறுகிய நேரத்தில் உடன் முடிவெடுத்து
அதிரடி போராட்டத்தில் ஈடுபட்ட RMS பகுதியின் NFPE மற்றும் FNPO
தலைவர்களுக்கு நம் தமிழக JCA சார்பிலும் , NFPE தமிழ் மாநில
ஒருங்கிணைப்பு குழு சார்பிலும் , நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று
சார்பிலும் வீர வாழ்த்துக்கள் ! கோரிக்கைகளில் தீர்வு ஏற்படவில்லையானால் ,
தமிழக JCA வடிவில் போராட்டம் விரிவு படுத்தப்படும் -
தீவிரப்படுத்தப்படும் என JCA சார்பில் NFPE கன்வீனர் தோழர். JR
அறிவித்தார் !
அநீதி களைவோம் ! அடிமை விலங்கொடிப்போம் !
ஆர்ப்பரித்துப் போராடுவோம் ! ஒன்று பட்டுப் போராடுவோம் !
வெல்க வெல்க நீதிக்கான போராட்டம் !